search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலிசபத் ராணி"

    வில்லியம் - கேட் தம்பதியரின் மூன்றாவது மகனான இளவரசர் லூயிஸ் ஞானஸ்நான விழாவில் அவருக்கு ஞானப் பெற்றோராக 6 தம்பதியர் தேர்வாகியுள்ளனர்.
    லண்டன்:

    காதல் திருமணம் செய்துகொண்ட பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியருக்கு கடந்த 23-4-2018 அன்று மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

    இளவரசர் லூயிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு மத்திய லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று ஞானஸ்நானம் அளிக்கும் விழா நடைபெறுகிறது.

    வரலாற்று சிறப்புமிக்க ஜோர்தான் நதியின் நீரால் இளவரசர் லூயிஸ்-க்கு ஞானஸ்நானம் அளிக்கும் விழாவை கேண்ட்டர்பரி நகரின் தலைமை பேராயர் தலைமையேற்று நடத்தி வைக்கவுள்ளார்.

    இந்த விழாவில் மறைந்த டயானாவின் கணவரும், இளவரசர் வில்லியம்ஸின் தந்தையும், பிரிட்டன் இளவரசருமான சார்லஸ் தனது மனைவி கமில்லாவுடன் பங்கேற்கிறார். இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியர் மற்றும்  வில்லியம் - கேட் தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ்(4), இளவரசி சார்லோட் கேட்டின் பெற்றோர், சகோதர - சகோதரிகள் மற்றும் அரச குடும்பத்து நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

    பொதுவாக, கிறிஸ்தவ குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிக்கும் சடங்கு நடைபெறும்போது, அந்த குழந்தையை கிறிஸ்தவ மதம்சார்ந்த நல்வழியில் வளர்த்து, சுகதுக்கங்களில் பங்கேற்கும் பொறுப்புகளை ஏற்க ‘ஞானத்தாய்’ மற்றும் ‘ஞானத்தந்தை’ ஆகியோரை நியமிப்பது உண்டு. தம்பதியராக சிலரையும் ‘ஞானப் பெற்றோர்’ ஆக நியமிக்கப்படுவர்.

    அவ்வகையில், இன்று ஞானஸ்நானம் பெறும் குட்டி இளவரசர் லூயிஸ்-க்கு ‘ஞானப் பெற்றோர்’ ஆக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


    அரசு குடும்பத்து நண்பர்களான நிக்கோலஸ் வாம் கட்ஸெம், கய் பெல்லி, ஹாரி ஆப்ரே-ஃப்ளெட்ச்சர், சீமாட்டி லாரா மியேட், ஹன்னாஹ் கில்லிங்ஹம் மற்றும் லூசி மிடில்ட்டன் ஆகியோரை ஞானப் பெற்றோராக இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியர் நியமித்துள்ளனர்.

    இன்று நடைபெறும் குட்டி இளவரசரின் ஞானஸ்நான விழாவில் ராணி எலிசபத்(92) பங்கேற்க மாட்டார் என இளவரசர் சார்லஸ் அரண்மனை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டன் நாட்டுக்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விண்ட்ஸர் கேஸ்ட்டில் அரண்மனையில் ராணி எலிசபத் சந்திக்க வேண்டியுள்ளதால், ராணியும் அவரது கணவர் பிலிப் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என கென்சிங்டன் அரண்மனையின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


    இந்த விழாவின் போது வில்லியம்ஸ் - கேட் தம்பதியர் தேனீர் விருந்து அளிக்கின்றனர். இந்த விருந்தில் வில்லியம்ஸ் - கேட் திருமணத்தின்போது தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் சிறப்பு கேக் பரிமாறப்படும் என லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #PrinceLouischristening #UKqueenmiss
    ×